இருவரின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்: சுவிஸில் 14 வயது சிறுவன் கைது

#Switzerland #Attack #Lanka4 #சுவிட்சர்லாந்து #தாக்குதல் #லங்கா4
இருவரின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்: சுவிஸில் 14 வயது சிறுவன் கைது

சுவிஸர்லாந்து பார்சல் நகரில் இருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 7:15 மணிக்கு Klybeckstrasse/Sperrstrasse வீதி இல் நிகழ்ந்துள்ளது.

 இந்தச் சம்பவத்தின் போது குறித்த வழியால் சென்ற இருவர், நபர் ஒருவரை தாக்கியதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

 இதையடுத்து இன்று காலை குற்றப்பிரிவினரால் பாதிக்கப்பட்ட நபரையும் சந்தேகிக்கப்படும் குற்றவாளியையும் அரசு வழக்கறிஞர் உதவியுடன் கண்டு பிடித்தனர்.

 தாக்குதலுக்குள்ளான நபருக்கு அதிக இரத்தம் சிந்தியதால் அவரை மீட்டு வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் பார்சல் மீட்புக்குழுவினர் சேர்த்தனர்.

 குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 14 வயதுடைய அல்ஜீரிய நாட்டு சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாவது சந்தேக நபர் தப்பியோடியுள்ளதால் அவரை தேடும் பணிகள் தீவிரப்பப்படுத்தப்பட்டுள்ளன.

 குறித்த தாக்குதல் சம்பவமானது இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ளது.

 இதற்கான காரணம் இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. பொலிஸார் இந்த தாக்குதல்குறித்து அறிந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4