பிரேஸிலில் சூறாவளி காரணமாக 13 பேர் பலி
#weather
#world_news
#Lanka4
#Brazil
Kanimoli
2 years ago
பிரேஸிலில் சூறாவளி காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரியோ கிராண்ட்டே டோ சுல் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் பழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இச்சூறாவளியினால் உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
சுமார் 5,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 84,000 பேருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதகாவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.