தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் தடை ஏற்படக்கூடும் - இலங்கை மின்சார ஊழியர் சங்கம்
#SriLanka
#Colombo
#strike
#Employees
#Lanka4
Kanimoli
2 years ago
நாளை மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும் நாளை கொழும்புக்கு அழைக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால், அன்றைய தினம் அனைத்து வேலைத் தளங்களும் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.