வாகன இறக்குமதிக்கு இவ்வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது: பதில் நிதியமைச்சர்
#SriLanka
#government
#Import
Prathees
2 years ago
அறிக்கை நாட்டின் சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது வாழ்க்கைச் செலவையும் குறைக்கும் என பதில் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் போது பல காரணிகள் பரிசீலிக்கப்படும் என்றும் பதில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.