பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்!

#SriLanka #Human Rights
Mayoorikka
2 years ago
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு  மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்!

இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.

 ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 53ஆவது அமர்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த தசாப்த காலத்தில் இலங்கைக்கு ஆணைக்குழுவைச் சேர்ந்த பலர் விஜயத்தினை மேற்கொண்டு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

 இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகள் அதனை அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 பொறுப்புக்கூறல் தொடர்பாக ஆணைக்குழுவில் பரிந்துரைகளை அரசாங்கம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆணைக்குழு தொடர்ந்தும் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலம் மட்டுமே மனித உரிமைகளை மேம்படுத்த முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!