இந்த வருடத்தில் வீதி விபத்துக்களில் 1043 பேர் பலி
#SriLanka
#Death
#Arrest
#Police
#Accident
#Lanka4
Kanimoli
2 years ago
இந்த வருடத்தில் வீதி விபத்துக்களில் 1043 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் இதுவரை 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.
பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் அல்லது பேரூந்துகள் போன்றவற்றினால் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.