இனப்பிரச்சனை தொடர்பான இறுதிவரைபு ஜுலை மாதம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இறுதி வரைபு அரசாங்கம் நியமித்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களுடன் அது தொடர்பில் தெளிவுபடுத்தப்படுத்தப்பட விருப்பதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக் குழுவின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் டிசம்பர் மாதம் முதல் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த இறுதிவரைபு ஜுலை மாதமளவில் பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். ஆனால் இது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய இராஜதந்திர வட்டாரங்களுடனும் இறுதி வரைபு தொடர்பான விடயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான மாநாடு தொடங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.