துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு
#India
#SriLanka
#Lanka4
#Ship
Kanimoli
2 years ago
இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS Vagir நீர்மூழ்கிக் கப்பல் இன்று(19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
67.5 மீட்டர் நீளமுடைய நீர்மூழ்கிக் கப்பல் 60 ஊழியர்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள யோகா நிகழ்வொன்றில் இலங்கை மற்றும் இந்திய கடற்படை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.