மும்பையில் சண் தவராஜாவின் 'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் அறிமுக விழா

#SriLanka
PriyaRam
2 years ago
மும்பையில்  சண் தவராஜாவின் 'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் அறிமுக விழா

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான சுவிஸ்லாந்து எழுத்தாளர் சண் தவராஜாவின் 'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் அறிமுக விழா கடந்த 7ஆம் திகதி மாலை திருச்சி பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. 

இனிய நந்தவனம் கௌரவ ஆலோசகரும், ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க செய்தித்தொடர்பாளருமான மேஜர் டோனர் டொக்டர் கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வி.ஐ.பி நிறுவனத்தின் திருச்சி கிளைத் துணைத்தலைவர் இரா.தங்கையா, ரோட்டரி உறுப்பினர் சேர்க்கை செயலாளர் சோ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

நிகழ்வில் மருத்துவர் செந்தில் நல்லசாமி, ஸ்ரீ சிவநாதன், சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பி.டெரன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அனைத்துலக தமிழ்மாமன்றத்தலைவர் வே.த.யோகநாதன் அனைவரையும் வரவேற்க, இனிய நந்தவனம் பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நூலாசிரியர் குறித்து அறிமுகவுரை ஆற்றினார். நிகழ்வில் கவிஞர் ம.திருவள்ளுவர் நூலாய்வு செய்தார். 

இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா.தனபால் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வில் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

images/content-image/2023/06/1687176467.png

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!