புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் வங்கிச்சேவை வசதிகள்
PriyaRam
2 years ago
புங்குடுதீவில் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாகும்பாபிசேக தினத்தை (25.06.2023) முன்னிட்டு தற்போதிலிருந்து அடியார்களின் பணப்பரிவர்த்தனையை இலகுவாக்கும் நோக்கோடும், பாதுகாப்புக் கருதியும் சர்வோதயம் அருகில் வங்கிச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பிகை அடியார்கள் பணப்பரிமாற்றத்தினை இலகுவாக மேற்கொள்வதற்காக இவ் வங்கிச்சேவை வசதிகள் ஆலய பரிபாலன சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.