துப்பாக்கியை சொக்லட் உண்பதுபோல கடித்து உண்டிருக்கலாம்: மீனவர்களிடம் டக்ளஸ் பதில்

#SriLanka #Fisherman
PriyaRam
2 years ago
துப்பாக்கியை சொக்லட் உண்பதுபோல கடித்து உண்டிருக்கலாம்: மீனவர்களிடம் டக்ளஸ் பதில்

கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் வாயில் துப்பாக்கியை வைத்து இராணுவம் அச்சுறுத்தியபோது - சினிமாப் பாணியில் துப்பாக்கியை சப்பி உண்டிருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

இரணைமடு குளத்தில் இழுவை மீன்பிடிமுறையைக் கட்டுப்படுத்தி, சட்டரீதியான மீன்பிடிமுறைக்கு மட்டும் அனுமதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடலின்போது அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இராணுவமும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் - கட்டுப்படுத்த முற்பட்ட மீனவர்களை மேல்வெடி வைத்தும், வாயில் துப்பாக்கியை வைத்தும் அச்சுறுத்தியதாக மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தை இன்றுதான் அறியமுடிவதாகவும், இவ்விடயம் தொடர்பில் படையினருக்கு எழுத்துமூலம் அறிவிக்குமாறும், அடுத்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இவ்விடயம் பேசப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரிடம் அமைச்சர் தெரிவித்தார். 

துப்பாக்கியை வாயில் வைத்து அச்சுறுத்தியபோது சினிமாவில் நடப்பது போன்று துப்பாக்கியை சொக்லட் உண்பதுபோல கடித்து உண்டிருக்கலாம் என அமைச்சர் நகைச்சுவையாக தெரிவித்தார். 

மேலும், இவ்விடயம் தொடர்பில் நீண்டநேரம் ஆராயப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும், அது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களத்துடன் ஆலோசித்து செய்யவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

images/content-image/2023/06/1687161589.jpg

images/content-image/2023/06/1687161700.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!