பசிலின் வலியுறுத்தலால் அமைச்சரவையில் மாற்றம்!

#SriLanka
Mayoorikka
2 years ago
பசிலின் வலியுறுத்தலால் அமைச்சரவையில் மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றத்துடன் ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

 முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ். எம். சந்திரசேன, சி. பி. ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியவர்களின் பெயர்கள் பசில் ராஜபக்சவினால் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சர் தேவையற்றவர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களுக்கு இவ்வாறான நிலையில் அதிக அமைச்சுப் பதவிகளை வழங்குவது பொருத்தமற்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தாமதப்படுத்தபப்ட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!