நேபாளத்தில் கனமழை: பலர் உயிரிழப்பு! 28 பேரை காணவில்லை
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கனமழையைத் தொடர்ந்து சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடும் போக்குவரத்து நெரிசலால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக, வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள அதேவேளை, நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேபிள்ஜங் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மாயமானதாகத் தெரியவில்லை. கனமழையால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது ஐந்தாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 28 பேரைக் காணவில்லை.
இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.'