பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வாஷிங்டனில் லட்சக்கணக்கானோர் ஒற்றுமை பேரணியில் ஈடுபட்டனர்

#India #world_news #D K Modi #Lanka4
Kanimoli
2 years ago
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வாஷிங்டனில்   லட்சக்கணக்கானோர் ஒற்றுமை பேரணியில் ஈடுபட்டனர்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூன் 21 முதல் 24 வரையிலான நாட்களில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும் நியூயார்க் உள்பட 20 பெரிய நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணியை நடத்தினர். இதில், சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பேரணியாக சென்றனர். 

அப்போது சமூக மக்கள், இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட போஸ்டர்கள் மற்றும் சமூகம் சார்ந்த பேனர்களை ஏந்தியும் சென்றனர்.

 அவர்கள் பேரணியின்போது, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் வந்தே அமெரிக்கா உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பியபடி சென்றனர். 

இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது அவர்களில் சிலர், ஹர் ஹர் மோடி என்ற பாடலுக்கு நடனம் ஆடியபடியும் சென்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!