கடன் மறுசீரமைப்பு இன்னும் நிறைவடையவில்லை: பதில் நிதியமைச்சர்
#SriLanka
Mayoorikka
2 years ago
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்கி மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முடிவுரை இல்லாத அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடையக்கூடும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அது தொடர்பில் பொறுப்புடன் அறிக்கை வெளியிட வேண்டும் என அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சாதகமான உடன்பாட்டை எட்டுவதற்கு நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.