எரிபொருள் தட்டுப்பாடு: எரிசக்தி அமைச்சர் காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Fuel
Mayoorikka
2 years ago
எரிபொருள் தட்டுப்பாடு:  எரிசக்தி அமைச்சர் காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் 95 பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

 நாடளாவிய ரீதியில் 95 பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வௌியான செய்தியை தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

 நாட்டின் நாளாந்த 95 பெற்றோலின் தேவை 80-100 மெட்ரிக் தொன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு இருப்புக்கள் உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து ஓர்டர்களும் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!