பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பெயர் பரிந்துரை!
#SriLanka
Mayoorikka
2 years ago
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் பதவிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெயரொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரே இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உத்தேச பெயர், அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில், உத்தேச பெயருக்கான அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.