பிரேசில் சூறாவளி - 11 பேர் மரணம்

#Death #Brazil #Strom #Rescue
Prasu
2 years ago
பிரேசில் சூறாவளி - 11 பேர் மரணம்

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் மாயமாகி உள்ளனர்.

புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.

இதுகுறித்து ரியோ கிராண்டே டோ சுலி மாநிலத்தின் ஆளுநர் எட்வார்டோ லைட் கூறுகையில், " காரா நகரின் நிலைமை எங்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. 

பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளை விரைவாக வரைபடமாக்கி, ஆதரவு தேவைப்படும் மக்களை அடையாளம் காண வேண்டியது அவசியம். கடந்த இரண்டு நாட்களில் அதிகாரிகள் 2,400 பேரை மீட்டுள்ளனர்.

இந்த தருணத்தில் முதலில் மனித உயிர்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாகும். சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்.

 மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!