பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க ஆலோசனை

#SriLanka #prices #Wheat flour #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க ஆலோசனை

உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பேக்கரி பொருட்களின் விலையை உடனடியாக 10 ரூபாவினால் குறைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகள் குறைவடையாத காரணத்தினால், தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 இதேவேளை, கோதுமை மா பொருட்களின் விலைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை தேவை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

 கோதுமை மாவுக்கு மாத்திரமல்ல அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் விலை கட்டுப்பாடு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 அவ்வாறான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!