எதிர்காலத்தில் கொரோனா அலை உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை
PriyaRam
2 years ago
எதிர்காலத்தில் கொரோனாத் தொற்று தீங்கு விளைவிக்கும் விவகாரங்களாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற 76 ஆவது உலக சுகாதார சபையில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா பாதிப்புக்கள் அதிகளவு இல்லாததால் தொற்று அவசரநிலையில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மேலும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, கொரோனாத் தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.