வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பம்
#SriLanka
#Passport
#Lanka4
Kanimoli
2 years ago
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இங்கு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வழங்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக்கொள்வதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.