பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் படகில் பயங்கர தீ விபத்து
#world_news
#Phillipines
#fire
#Breakingnews
#Boat
Mani
2 years ago
இன்று, பிலிப்பைன்ஸின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு பயணிகள் படகு ஒன்று 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, படகில் திடீரென தீப்பிடித்ததால், படகு முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால், படகில் இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் படகில் இருந்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 120 பேருடன் பயணித்த படகில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.