யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் வலம் வந்த நாகங்கள்
#SriLanka
#Temple
#Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் நேற்று (17) நாகங்கள் வலம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா ஜுன் 19ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ஆலய வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் மேற்கு வீதி கற்குவியலுக்குள் இருந்து நாக பாம்புகள் வெளிவந்துள்ளன.
மூன்று நாகங்கள் ஆலய வீதியில் படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றதில் பக்தர்கள் பரவசமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகபாம்புகள் வலம் வந்து படம் எடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.