முட்கொம்பன் இராணுவ முகாமில் தீ விபத்து
PriyaRam
2 years ago
கிளிநொச்சி - பூநகரி, முட்கொம்பன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று (17) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி - முட்கொம்பன் சின்னபல்லவராயன்கட்டு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டட தொகுதியிலேயே நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்னொழுக்கு காரணமாகவே தீ பரவியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.