சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுடன் சந்திப்பு

PriyaRam
2 years ago
சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுடன்   சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவின் தலைவர் செவரின் சப்பாஸ், துணைத் தூதுக்குழு தலைவர் அலக்சான்டர் புரொவ் ஆகியோர் வடக்கிற்கான விஜயத்தின்போது - யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை கடந்த புதன்கிழமை (ஜூன் 14) பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். 

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தூதுக்குழுவை தளபதி மரியாதையுடன் வரவேற்றார். இந்தச் சந்திப்பின்போது, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், பாதுகாப்பு பிரச்சினைகள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து கருத்துக்களை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் வருகை தந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் பரிமாறிக்கொண்டனர். சந்திப்பின் நிறைவில், நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!