பொதுஜன பெரமுன நாட்டுக்கு விரோதமான அழிவுகரமான பயணத்தை மேற்கொள்ளாது - பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு விரோதமான அழிவுகரமான பயணத்தை மேற்கொள்ளாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தான் பிறந்த நாட்டின் வளர்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் தனது கட்சிக்கு இல்லை என்று அவர் வலியுறுத்துகிறார். எனவே, எதிர்க்கட்சிகள் உருவாக்கும் பொய்யான பலிகடாக்களுக்கு அஞ்சாமல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொள்கின்றார்.
உடுகம்பொல ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (17) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “எதிர்க்கட்சிகள் தேர்தலுக்காக முழக்கமிடுகின்றன. தேர்தல் இல்லாவிட்டால் கொழும்பு முற்றுகையிடப்படும் என்றார்கள்.
வெகு சிலரே வந்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர்கள் வேடிக்கைக்காகச் செய்யும் காரியம் என்று நினைக்கிறேன். ஜே.வி.பி.யின் வரலாற்றில் அதிகம் செய்த காரியம் தேர்தலைத் தவிர்ப்பதுதான். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் கடைசி நிமிடத்தில் அறிவித்தார்.