மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
PriyaRam
2 years ago
மினுவாங்கொட- பொரகொடவத்த, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பத்தில் 33 மற்றும் 43 வயதுடைய இருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.