மகனைப் பார்க்க வீட்டுக்குச் சென்ற தாய்: சடலமாக மீட்கப்பட்ட மகன்
இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனிஹிங்கந்த பகுதியிலுள்ள வீட்டிற்கு அருகில் தனது மகன் கொலைசெய்யப்பட்டிருப்பதை நேரில் பார்த்த தாயொருவர் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.
திருமணமாகி பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்த மகன் குறித்து விசாரிப்பதற்காக அவரது தாய் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாயின் அருகே மகன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
குறித்த நபரின் தாயார் அயகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காலை அயகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முனிஹிங்கந்த, கவரகிரி பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய சியாகோஸ் என்ற நபரே இறந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்தில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட உள்ளது.
குற்றத்தை செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.