தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#pirasanna ranathunga
Kanimoli
2 years ago
தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் மேற்படி வரைவு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதன் கீழான ஏனைய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக “தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” தயாரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலாளர்களின் உப குழுவின் பரிந்துரையை தொடர்ந்து ஜனாதிபதியின் பங்கேற்புடன் கூடியதான பௌதீக திட்டமிடற் சபையின் National Physical Planning Council (NPPC) அனுமதிக்காகவே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.