யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம்
#SriLanka
#Mahinda Amaraweera
#Lanka4
Kanimoli
2 years ago
யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 10,000 ரூபாவாக இருந்த 50 கிலோ யூரியா மூடையின் விலை 9000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
மேலும், 19,500 ரூபாவாக உள்ள ஒரு மூடை பண்டி உரம் 15,000 ரூபாவாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
உரங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட வவுச்சரில் யூரியா, பூந்தி உரங்கள் மற்றும் கரிம உரங்களை அவற்றின் பெறுமதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.