3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மோசடி: கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர்
#SriLanka
#Arrest
#Dollar
Mayoorikka
2 years ago
300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கொம்பனிதெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வசதி செய்து தருவதாக கூறி இந்திய பிரஜை 300,678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர் வீட்டு வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றி 300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 65 வயதுடையவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.