வர்த்தகரிடம் கப்பம் கோரிய மூன்று சந்தேக நபர்கள் கைது
#SriLanka
#Arrest
#Police
#sri lanka tamil news
Prathees
2 years ago
மருந்து உற்பத்தி நிறுவனமொன்றை நடத்தும் நபரிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தமது உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடும் வகையில் விளம்பரம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரியுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொகையுடன் பண்டாரகம நகருக்கு வருமாறு குறித்த நபருக்கு கப்பம் கோருபவர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, கப்பம் பெற வந்த மூன்று சந்தேக நபர்களும் பண்டாரகம நகரில் கத்தியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அலுபோமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகவும், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.