கால்வாய்க்கு விடப்படும் பல்கலைக்கழக விடுதியின் மலக்கழிவுகள்:பிரதேச மக்கள் குற்றச்சாட்டு
ஹோமாகம மஹேனவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்திற்கு சொந்தமான மாணவர் விடுதியில் கழிவுநீர் அமைப்பு செயற்படாததால் பல சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
கால்வாய்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த இந்த மாணவர் விடுதியில் சுமார் 1,500 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
ஆனால், சில நாட்களாக, விடுதியின் கழிவுநீர் கால்வாய் செயல்படாததால், அப்பகுதி கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதாக, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இக்கால்வாய்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 20 ஏக்கர் நெற்பயிர்களுக்கு உணவளிப்பதுடன், மலக்கழிவுகள் குவிந்து கிடப்பதால், விவசாயிகள் நெற்பயிர்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் விசாரித்து, அதற்கான தீர்வுகளை வழங்கியும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான துறைகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், தங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.