ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு
மீட்டியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிகம ஆலயத்திற்கு அருகில் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் மீது இன்று (17) காலை துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவா் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சீனிகம ஆலயத்திற்கு அருகில் தனது கெப் ரக வண்டியில் சென்றபோது - மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில், அவா் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் - ஹிக்கடுவ பொலிஸ் அதிகாரிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்