பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டு அதிபரும் இளம் தாயும் உயிரிழப்பு
பேராதனை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயதுடைய பெண் அதிபர் ஒருவர் ஹெர்னியா சத்திரசிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக நேற்று (16ஆம் திகதி) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஏ. ஜி. கருணாவதி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய். கண்டி மவுஸ்ஸாவா கனிஷ்ட உயர்தரப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது செலுத்தப்பட்ட ஊசியினால் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதிபர்இ இறக்கும் வரை அங்கேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதிபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரசவத்திற்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயாருக்கும் அதிபருக்கு வழங்கப்பட்ட மயக்க ஊசி மூலம் உபாதைகள் ஏற்பட்டதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான சம்பவத்திற்குப் பிறகு, நோயாளிகளுக்கு மயக்க மருந்து வழங்குவது, சிக்கல்களை ஏற்படுத்தியது, சுகாதார அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டது மற்றும் இது தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டது.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்க்கு வழங்கப்பட்ட தடுப்பூசி சில நாட்களுக்கு முன்னர் அதிபருக்கு வழங்கப்பட்டதாகவும், இளம் தாய் உபாதைகள் காரணமாக உயிரிழந்ததாகவும் பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.