இலங்கையில் குடும்பம் ஒன்றிற்கான மாதாந்த செலவு அதிகரிப்பு: வெளியான ஐ.நா அறிக்கை

#SriLanka #UN #report
Mayoorikka
2 years ago
இலங்கையில் குடும்பம் ஒன்றிற்கான மாதாந்த செலவு அதிகரிப்பு: வெளியான ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி, இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

 கணக்கெடுப்புத் தரவுகளின்படி, கடந்த வருடம் இலங்கையில் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு சுமார் 63,820 ரூபாவாகும் என அவர் கூறினார். இலங்கை குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவில் ஐம்பத்து மூன்று வீதம் அதாவது 40632 ரூபா உணவுக்காக செலவிடப்பட வேண்டியுள்ளது. 

மீதமுள்ள 35,492 ரூபாய் (மொத்த செலவில் 47 சதவீதம்) உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப்படுகிறது என்று பேராசிரியர் கூறினார். இதேவேளை, இலங்கையில் 60 வீதமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் குறைந்துள்ளதாக திரு.அத்துகோரள தெரிவித்தார்.

 இதேவேளை, இலங்கை குடும்பங்களின் உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும்பகுதி கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிட வேண்டியுள்ளதாகவும், இது உணவு அல்லாத செலவினங்களில் 23 வீதமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப்படும் பணத்தில் 14 வீதம் கல்விக்காகவும், 15 வீதம் மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காகவும், 13 வீதம் எரிபொருளுக்காகவும், 10 வீதம் ஆடைகளுக்காகவும், 6 வீதம் போக்குவரத்துச் செலவுகளுக்காகவும் ஒதுக்கப்படும் என வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

 இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 11.5% எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ததன் காரணமாகவே இந்த பணவீக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!