கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அவசியமா? ஜனாதிபதி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைந்த பிள்ளைகள் பாடசாலையை இடைநிறுத்த அனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் 13 வருடங்கள் பாடசாலைக் கல்வி வழங்கினால், பொதுப் பரீட்சையை நடத்துவது அவசியமா என்பதில் சிக்கல் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்கமைய, பொதுத் தரா தரப் பரீட்சை வேறு முறையில் நடத்தப்படுமா அல்லது சித்தி அல்லது தோல்விப் பரீட்சையாக நடத்தப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் பிள்ளைகள் பாடசாலையை இடைநிறுத்த அனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் 13 வருடங்கள் பாடசாலைக் கல்வி வழங்கினால், பொதுப் பரீட்சையை நடத்துவது அவசியமா என்பதில் சிக்கல் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்கமைய, பொதுத் தராதர தரப் பரீட்சை வேறு முறையில் நடத்தப்படுமா அல்லது சித்தி அல்லது தோல்விப் பரீட்சையாக நடத்தப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.