யாரேனும் கூட்டமொன்றுக்கு அழைப்பதாக இருந்தால் முதலில் கட்சிக்கு அறிவிக்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ

#SriLanka #Basil Rajapaksa #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
யாரேனும் கூட்டமொன்றுக்கு அழைப்பதாக இருந்தால் முதலில் கட்சிக்கு அறிவிக்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்களை யாரேனும் கூட்டமொன்றுக்கு அழைப்பதாக இருந்தால் முதலில் கட்சிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் கட்சியே அந்த உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் பிரதம அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 மாவட்ட அமைப்பாளர்கள் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் நேற்று நடந்த கூட்டத்தின் போதே இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். நாட்டின் முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறும் கூட்டங்கள் குறித்து அதிகாரிகள் வெவ்வேறான கருத்துக்களை சொல்வதால் கட்சியின் ஒழுக்கத்திற்கு கேடு ஏற்படலாம் என்றே இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

 இதற்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தின் கட்சி எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதனை சரி செய்ய தேவையான திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் குறித்து பசில் ராஜபக்ஷ கலந்துரையாடிய நிலையில் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது சீராகியுள்ளதாக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்வது நல்லது என்று அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!