கடற்படை பேருந்து - பார ஊர்தி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இருவர் உயிரிழப்பு
#SriLanka
#Accident
#Bus
#Lanka4
#இலங்கை
#விபத்து
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
இன்று காலை கிரிதர-தெல்கொட வீதியில் மலிடா என்ற இடத்தில் கடற்படை ஊழியர் பஸ்ஸொன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் 39 மற்றும் 46 வயதுடைய ஹப்புத்தளை மற்றும் தெல்கொட பிரதேசங்களை ச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.