ரஷ்யாவின் 80 சதவீத கச்சா எண்ணெயை இந்தியாவும் சீனாவும் கொள்முதல்

#India #China #world_news #Russia #Oil #Breakingnews
Mani
2 years ago
ரஷ்யாவின் 80 சதவீத கச்சா எண்ணெயை இந்தியாவும் சீனாவும் கொள்முதல்

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடங்கியது, இதன் விளைவாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியது. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன.

அதன் பிறகு ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விற்பனையை ஆசியாவிற்கு பக்கம் திருப்பியது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.

கடந்த மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் முதலிடத்தில் உள்ளன.

கடந்த மாதம், ரஷ்யாவின் 80 சதவீத கச்சா எண்ணெயை இந்தியாவும் சீனாவும் கூட்டாக கொள்முதல் செய்துள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வரும் நிலையில், சீனா தனது தினசரி கொள்முதலை 500,000 பேரல் வாங்கி வந்த சீனா தற்போது 22 லட்சம் பேரல் கொள்முதல் செய்து வருகிறது.

இதேபோல், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த அளவு கச்சா எண்ணெயை வாங்கிய இந்தியா, தற்போது தினமும் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்குகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!