கடலுக்கு அடியில் 'மீண்டும் ஏவுகணை சோதனை' செய்த வடகொரியா
#world_news
#NorthKorea
#Breakingnews
Mani
2 years ago
சர்வதேச தடைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வடகொரியா கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவுகணையை கடலுக்குள் செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது தென்கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று,வட கொரியா மற்றும் தென் கொரியா எல்லைக்கு அருகாமையில் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ பயிற்சி நடந்தது. இதற்கு பதிலடியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.