கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது மருத்துவர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிப்பு

PriyaRam
2 years ago
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது மருத்துவர் மற்றும் பொறியியலாளர்கள்  கௌரவிப்பு

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கணித விஞ்ஞான பிரிவு உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில் தெரிவாகிய மருத்துவர் மற்றும் பொறியியலாளர்களாக வெளியேறிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் முதல்வரால் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 2013 ஆம் ஆண்டு கணித விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு பரீட்சையில் தோற்றி, திறமைச் சித்தி பெற்று 60 மாணவர்கள் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். அவ்வாண்டில் முதன்மை பெறுபேறுகளை பெற்ற கர்சிகா யசோதரன் என்ற மாணவி மகாவித்தியாலயத்திலிருந்து தெரிவான முதலாவது மருத்துவராவார்.

மேலும், இராசேந்திரன் மதுசனன், முத்தையா ருசாந்தன் ஆகிய மாணவர்களும் பாடசாலையிலிருந்து தெரிவான முதலாவது பொறியியலாளர்களாவர். இவர்கள் தற்போது பட்டப்படிப்பினை முடித்து பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

images/content-image/2023/06/1686901278.jpg

images/content-image/2023/06/1686901309.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!