வடக்கு கிழக்கில் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி அபகரிக்க திட்டம்!
முல்லைத்தீவு குருந்தி விகாரைக்கும் திருகோணமலை திரிய விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளமை தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தி கோயிலுக்கு 2000 ஏக்கர் காணியும், திருகோணமலை திரிய கோயிலுக்கு 3000 ஏக்கர் காணியும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வனவள திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு சொந்தமான காணிகளை விஞ்ஞான ரீதியான காணிகள் எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாக கண்டறியுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக இந்தக் குழுவை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.