பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பல மாணவர்கள் படுகாயம்
#SriLanka
#Accident
#School Student
#school van
Mayoorikka
2 years ago
தியத்தலாவ பண்டாரவளை பிரதான வீதியில் இன்று (16) காலை கஹகொல்ல பிரதேசத்தில் பாடசாலை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பாடசாலை மாணவர்களும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலை 6:30 மணியளவில் விபத்து நடந்ததை அடுத்து, பாடசாலை பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்தனர்.
பேருந்து விபத்துக்குள்ளானதையடுத்து, ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த அவரை மீட்க காவல்துறையினரும், அப்பகுதி மக்களும் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.
காயமடைந்த பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.