வகுப்பறையில் நாற்காலிகளை தொங்கவிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை
#SriLanka
#exam
#Susil Premajayantha
#Lanka4
#Examination
Kanimoli
2 years ago
சாதாரண தரப்பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட சம்பவம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று(15) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த மாணவர்களின் செலவில் சேதமாக்கப்பட்ட வகுப்பறை மற்றும் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.