ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம்: பொலிஸார் ஒருவர் பணி நீக்கம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கடமையை செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பணி நீக்கம் செய்ய பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது, கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த முதற்கட்ட விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், ஒழுக்கத்தை மீறியமைக்கான 12 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸ் சார்ஜென்ட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி அனைத்து குற்றச்சாட்டுகளையும் முதல் சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்டார்.
எனவே அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை மா அதிபர் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் பொலிஸ் சார்ஜென்டை பொலிஸ் சேவையில் இருந்து பணி நீக்கம் செய்து பொலிஸ் தலைமையகம் உரிய உத்தரவு பிறப்பித்தது.