முல்லைத்தீவுக்கு திடீரென விரையும் உதய கம்மன்பில!
#SriLanka
#Mullaitivu
Mayoorikka
2 years ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குருந்தி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்ததை நிரூபிப்பதற்காக தானும் கட்சிப் பிரதிநிதிகள் குழுவும் எதிர்வரும் 21ஆம் திகதி குருந்தி செல்ல தீர்மானித்ததாக பிவித்துரு ஹெலருமவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குருந்தி விகாரை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.