ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரித்த பெண் எம்.பி.
ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார்.
சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில், பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
தற்போது, தோர்ப் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் என்பவர் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார்.
வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாக தெரிவித்த தோர்ப், பாராளுமன்ற விதிகளின்படி தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.