தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து 25 நாய்களை காப்பாற்றிய நபர் - குவியும் பாராட்டுக்கள்

#Accident #fire #Peru #Rescue #Dog
Prasu
2 years ago
தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து 25 நாய்களை காப்பாற்றிய நபர் - குவியும் பாராட்டுக்கள்

திடீர் விபத்துகள் ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு பலரும் உதவி செய்வார்கள். ஆனாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதில் ஏறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது சற்று கடினமானது. 

ஆனால் பெரு நாட்டில் உள்ள லிமா பகுதியில் பெரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நாய்கள் சிக்கி கொண்டன. கட்டிடத்தை சுற்றிலும் தீ பரவியதால், அதில் சிக்கிய நாய்களை மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் அரியாஸ் என்ற வாலிபர் தீப்பிடித்த கட்டிடத்தில் ஏறி அதில் சிக்கி இருந்த நாய்கள் ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசினார். 

அப்போது அங்கு வலையுடன் தயாராக நின்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்களை பிடித்து காப்பாற்றினர். இந்த சம்பவத்தில் மொத்தம் 25 நாய்கள் மீட்கப்பட்டுள்ளன. 

துரிதமாக செயல்பட்டு நாய்களை செபாஸ்டியன் காப்பாற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அவற்றை பார்த்த பயனர்கள் செபாஸ்டியனை 'ரியல் ஹீரோ' என்று பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!