புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்த போப் பிரான்சிஸ்

#Hospital #Pop Francis #cancer
Prasu
2 years ago
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்த போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது.

போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. அதில், போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் வார்டை வீல் சேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளிடம் பேசியது தெரிந்தது.

 டிஸ்சார்ஜ்க்கு பிறகு ஜூலை மாதம் முழுவதும் போப் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பிறகு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்லவுள்ளார். தொடர்ந்து, ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மங்கோல்யா செல்ல திட்டமிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!